#12b. ருக்மாங்கதன்-2

முனிவரின் ஆசிரமம் தென்பட்டது அங்கு,
இனிய ஆசிரமம் முனிவர் கவியுடையது.

முனிவர் சென்றிருந்தார் சீடருடன் வெளியே
தனித்து இருந்தாள் முனிபத்தினி முகுந்தை.

உல்லாசமாக நந்தவனத்தில் இருந்தவளை
மெல்ல அணுகினான் ருக்மாங்கத அரசன்.

“தாயே! வீமராஜனின் புதல்வன் நான்;
தாகத்துக்கு தரவேண்டும் நல்ல குடிநீர்.

துஷ்ட மிருகங்களை வேட்டையாடினேன்!
கஷ்டம் தருகின்றன தாகமும், களைப்பும்.”

அத்தனை அழகான மனிதனை முகுந்தை
அதுவரை கண்டதில்லை வாழ்க்கையில்.

முனிவர் என்றாலே தாடியும், மீசையும்.
முனிவர் என்றாலே நகமும் மரவுரியும்.

நாணத்தைத் துறந்தாள் கமவயப்பட்டு!
தாபத்தைச் சொன்னாள் ஆணழகனிடம்.

ஆடைகள் நெகிழ, ஆசைத் தீ பெருக,
ஆடவர் மயங்க நின்றாள் முகுந்தை.

கண்களை மூடிக் கொண்டு கூறினான்,
“பெண்களில் உயர்ந்த நீங்கள் என் தாய்!

சோதிக்க வேண்டாம் தாயே என்னை!
பாதிப்பு அழித்துவிடும் இருவரையும்.

முனிவரின் மனைவியான தாங்கள் என்
இனிய தாயினும் மேலானவர் அம்மா!”

“என்னை ஒருமுறை ஏறிட்டுப் பார் நீ!
உன்னை சுகித்தாலன்றித் தீராது தாபம்!

சோதனை செய்யாதே மேலும் மேலும்,
வேதனை தாங்காது என் விரஹதாபம்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#12 b. RukmAngathan – 2

RukmAngathan saw an ashram nearby. It belonged to Sage Kavi. He had gone out with his disciples. His wife Mukundai was all alone in the flower laden garden, in a merry mood.

The king approached her with great respect and introduced himself as the son of King Beema RAjan. He requested for a drink of cool refreshing water.

Mukundai had never cast her eyes on such a handsome, impressive and strong man before. She felt lust burning inside her a bonfire. She invited him to enjoy her beauty and youth. She stood there with her dresses disheveled and in a manner no man can resist.

The king covered his eyes and spoke to her, “You are a rushi patni. So you are like a mother to me. The thing you are suggesting will destroy both of us. Please come to your senses”

But Mukundai was determined to possess him at any cost. She told him,”Just look at me once and try to say “No!” to my invitation. My desire for you will never be satisfied unless we enjoy together.”