#20b. ஆதிசேஷன்-2

பிரவாள நகரம் சென்றான் ஆதிசேஷன்,
விரதம் அனுஷ்டித்தான் பயபக்தியுடன்.

சித்தி, புத்தி தேவியர்களுடன் விநாயகர்
சிங்க வாகனத்தில் தோன்றி அருளினார்.

சிரம் தாழ்த்தி வணங்கினான் ஆதிசேஷன்;
பிரார்த்தித்தான்,” என்னைக் காத்தருளும்!”

“கர்வத்தால் இழந்து விட்ட உன் சக்திகள்
சர்வமும் உன்னை வந்தடையும் மீண்டும்!

தரையில் அடித்ததால் ஏற்பட்ட பிளவுகள்
சிரங்களாக மாறிவிடும் இப்போது முதல்.

தாங்கி வருவாய் ஆயிரம் தலைகளுடன்
தரணியை முன் எப்போது போலவே நீ!

ஈசன் சடை மீது ஐந்து தலைகளுடன்
இருந்து வருவாய் நீ எப்போதும் போல.

இன்னமும் நீ மாறுவாய்! இனி எனது
இனிய உத்தர பந்தனமாகவும் ஆவாய்!

விஸ்வரூபம் எடுத்தார் விநாயகபிரான்!
வயிற்றைச் சுற்றி அணிந்தார் அவனை.

விநாயகர் அருளால் இழந்தவைகளை
வெற்றியுடன் பெற்றான் ஆதிசேஷன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#20b. Aadhiseshan

Aadhiseshan went to the City called PravALa and observed the Chathurti vratham. VinAyaka appeared to him accompanied by Siddhi Devi and Buddhi Devi on Simha vAhana. Aadhiseshan prayed to him, “Please save me!” VinAyaka blessed him and said,

“You will regain all that you have lost due to your pride. The thousand shreds of your head caused when it was smashed on the ground will become thousand heads. You will carry the world on your heads as before. You will be on Siva’s jada as a five headed snake. You will become my Udhara bandhan also now!”

He took viswaroopam and tied Aadiseshan around hid waist. Adiseshan was happy to get back his lost powers and become the udhara bandan of VinAyaka.