#29g. சுவர்க்கம்

சூரசேனன் கேட்டான் இக்கதையினை;
சூரசேனன் மனம் வெண்ணெய் ஆனது!

தேவகணங்களிடம் கூறினான் அவன்,
“பாவ காரியங்கள் செய்திருந்தான் பல.

தண்டனை அனுபவித்தான் பலகாலம்
மண்ணிலும் நரகத்திலும் உழன்றபடி.

தீராத நோயுடன் பிறந்துள்ளான்;
பாராமுகம் தகுதில்ல உமக்கு.

கற்பக விநாயக தேவகணங்களின்
அற்புத தரிசனமும் பெற்றுள்ளான்.

தரிசித்த அளவில் தீர்ந்து போகுமே
அறிந்து செய்த பாவங்களும் கூட!

எச்சில் உணவைப் புசித்துவிட்டு,
எள்ளளவும் பக்தியே இல்லாமல்,

“கணபதி! கணபதி!” என்று கூறிய
பெண்ணின் பாவம் தீர்ந்துபோனது!

சதா இறைவன் அருகில் உள்ளவர்கள்
சாதாரணமானவர்களா? இல்லை இல்லை.

கிருபை செய்வீர் இந்த வணிகனுக்கும்.
அருள்வீர் அவனுக்கும் விண்ணுலகு.”

இத்தனை பரோபகார சிந்தனையா?
அத்தனை பேரும் வியந்து போற்றினர்.

மனம் இளகினர் தேவகணங்கள்;
அனுகிரஹம் செய்தனர் பாவம் தீர.

திவ்விய சரீரத்தை அடைந்த வணிகன்
திவ்விய விமானத்தில் ஏறி அமர்ந்தான்.

அய்யன் அருள் இருக்குமானால் நம்மால்
செய்ய முடியாதது என்று ஏதுமுண்டோ?

பரோபகாரி மன்னன் சூரசேனன்
விரோதிக்கும் அருளும் பெருமகன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#29G. Swarggam

King SoorasEnan listened to this story of Budhan and his heart melted like butter. He told the DEva gaNAs,

“This man has committed many sins. He also got duly punished on earth and in hell. Again he is born with an incurable disease and is suffering now. He has had the dharshan of you the DEva gaNAs of GaNapthi. That itself is enough to cancel out all his sins.

The chandaaLa sthree ate the left overs of the feast and uttered the name of God as “GaNapathi! GaNapathi!” without any devotion. Yet all her sins vanished. You DEva gaNAs reside near GaNapathi. Your dharshan will purify any sinner. Please let Budhan also come to heaven”

Everyone wondered at the goodness of the king SurasEnan. The DEva gaNa gave in finally and made all Budan’s sins vanish. The merchant Budhan now had a divya sareeram. He got into the vimAnam and they all took off to the VinAyaka lOkam in that vimAnam.