#17c. சதுர்த்தி விரதம்

ஆதிப் பரம்பொருள் ஆவார் விநாயகர்;
மூவர்க்கும் முதல்வர் ஆவர் விநாயகர்;

சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பவர்கள்
சாதிப்பார்கள் உள்ளக் கிடக்கையை.

ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தியில்
ஆரம்பிக்க வேண்டும் இந்த விரதத்தை.

மண்ணால் ஓர் உருவம் சமைக்கவேண்டும்;
பொன்னால் ஓர் உருவம் சமைக்க வேண்டும்;

பொற்கலசம் ஒன்றை அமைக்க வேண்டும்;
பற்றுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும்.

அடுத்தமாதம் சுக்கில பட்ச சதுர்த்தியில்
விடவேண்டும் மண் விநாயகரை நீரில்.

முப்பது நாளும் குறையாத பக்தியுடன்
தப்பாமல் விநாயகரைத் தொழவேண்டும்.”

“இத்துணை கடின விரதத்தை எவரேனும்
இதுவரை செய்தது உண்டா தந்தையே?”

“விரதங்களில் சிறந்தது சதுர்த்தி விரதம்!
பரமனே உரைத்தான் அன்று முருகனுக்கு.

முழுமுதற் பொருள் விநாயக மூர்த்தி.
மும்மூர்த்திகளைப் படைத்தவரும் அவரே.

தோற்றங்கள் பல எடுத்துள்ளார் அவர் – என்
மூத்த குமாரனாக வந்ததது அதில் ஒன்று.”

சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தாள் பார்வதி
வதுவையாடினாள் சிவனை எண்ணியபடி!

விவரித்தார் முனிவர் விரதமகிமைகள்,
வினாயகர் பெருமைகள் பற்றி மேலும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 17c. Chathurti vratham.

“VinAyaka is the foremost among Gods. VinAyaka created the trimoortis. Those who observe Chathurti vratham achieve what they had set out to achieve. The Chathurti vratham must be started on the fourth day in the poorva paksha in the month of AavaNi.

Image of VinAyaka must be made of clay as well as gold. A gold kalasam must be set up along with the two moortis. Pooja must be done with bhakti for thirty days continuously. On the chathurti day of the next month, the clay image must be thrown in a river or lake.

“Has anyone performed this difficult vratham so far?” PArvathi asked her father Parvatha RAjan. “Chathurti vratham is considered the best among all the vrathams. Parama Sivan told Murugan on one occasion that VinAyaka is the foremost among gods. He has taken many avatars. Appearing as his elder one was one of them.”

PArvathi observed the tough Chathurti Vratham in the prescribed manner. She married Lord Siva as her heart desired. The sage went on to describe the greatness of VinAyaka and Chathurti Vratham.