# 20a. ஆதிசேஷன்-1

கயிலாய நாதனைக் காண வந்த தேவர்கள்
மெய்யன்போடு தொழுதனர் ஈசன் உமையை.

இடத்தால் கிடைத்த உயர்வால் ஆதிசேஷன்
சடைமேல் இருந்து அடைந்தான் கர்வம்!

கர்வம் கொண்டால் கிடைக்கும் தண்டனை!
சர்வமும் அறிந்துள்ள பெருமான் அளிப்பார்.

கையால் பற்றி இழுத்தார் கைலாய நாதர்;
மெய்வருந்த ஓங்கி அடித்தார் தரையில்.

ஆயிரம் பிளவுகள் ஆகிவிட்டது அவன் சிரம்.
போய் விழுந்து மயங்கிவிட்டான் தரையில்!

திரிகாலஞானி, திரிலோக சஞ்சாரி நாரதர்
பரிவுடன் கேட்டார், ” சேஷா!என்ன ஆயிற்று?”

அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை ஆதிசேஷன்;
அவருக்கு ஒரு பதிலும் கூறவில்லை அவன்.

ஞானக் கண்ணால் கண்டார் நடந்தவற்றை
ஞானம் புகட்டினார் நாரதர் ஆதிசேஷனுக்கு!

“இடத்தால் கிடைக்கும் பெருமையினால்
அடையக் கூடாது மனதில் பெரும் கர்வம்!

கொடுத்தவன் இந்தப் பெருமையை ஈசனே!
விடக் கூடாது இந்த நினைவை என்றுமே!

விக்கினங்கள் நீக்குபவர் நம் வினாயகர்;
விரதம் அனுஷ்டிப்பாய் நீ சதுர்த்தியன்று.

ஷடாக்ஷரம் ஓதியபடித் துதித்து வந்தால்
சர்வலோக நாயகன் புரிவார் திருவருள்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

# 20a. Aadhiseshan

When DEvA came to Kailash they paid obeisance to Siva and Uma.

Adhiseshan who was on the matted coils on Siva’s head also got worshiped by this act. He felt proud that he too got respected by all.

Siva read his thoughts. Siva loves to nip the pride in the bud. He pulled out Aadiseshan from his head and smashed his head on the ground.

The head broke into one thousand shreds and Adhiseshan fell faint.

NArada went by and asked him what had happened. Aadiseshan was filled with shame and did nor reply to him.

NArada told him, “We should not feel proud when we get lifted to place of honor. We must remember that it is also a gift of God and remain grateful to him always. Only Lord VinAyaka can remove all your trouble. Worship him and pray for his grace!”