#9b. பிணி நீங்கியது-2

பெருகியது ஆனந்தக் கண்ணீர் மாலை!
உருகியது நெஞ்சம் முனிவர் ஆசியால்!

உரைத்தான் தன் கதையை வீமராஜன்,
“உரைப்பீர் இதன் காரண காரியம்!”என;

“விநாயகரைத் தொழுதனர் முன்னோர்கள்;
விரும்பிய மனைவியின் காதல் மிகுதியால்

மறந்து விட்டாய் தெய்வ ஆராதனனையை.
துறந்துவிட்டாய் விக்னேஸ்வர பூசையினை.

முன்னோர்கள் பெற்ற நன்மைகள் போலவே
உன்னாலும் முயன்று பெற முடியும் மன்னா!”

முனிவர் கூறலுற்றார் மன்னன் வீமனின்
முன்னோர்களின் கதையினை விவரமாக.

வல்லவ ராஜன் கர்நாடக தேசத்தை
நல்ல முறையில் ஆண்டுவந்தான்.

பிறந்த மகனால் குலைந்தது அமைதி
குருடு, செவிடு, ஊமையாக இருந்தான்!

உடல் முழுவதும் இருந்தன ரணங்கள்;
இடர் தந்தன வழிந்த சீழும் ரத்தமும்.

கவலை பெருகியது குழந்தையால் – அரசி
கமலை தளர்ந்தாள் மனம் துவண்டதால்.

தக்கன் என்று பெயரினை இட்டன.ர்
தக்க வைத்தியமும் செய்து வந்தனர்.

ஆண்டுகள் பன்னிரண்டு சென்றாலும்
ஆறவில்லை ரணங்கள் சிறிதளவேனும்

வல்லவராஜன் இழந்தான் பொறுமையை;
சொல்வான்,”கானகம் சென்று விடுங்கள்”

அஞ்சினாள்; கெஞ்சினாள்; அரசி கமலை
கொஞ்சமும் மாறவில்லை அரசனின் உறுதி.

மகனுடன் வெளியேறினாள் கமலை – இனி
பகவானே துணை அவ்விருவருக்கும் என.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#9b. The miraculous cure – 2

The King and the queen were shedding tears of joy moved by the sage’s blessings. Beema RAjan told his life story and requested the rushi to find out the cause of his misery.

The sage ViswAmitra replied,”All your ancestors were true devotees of VinAyaka. You loved your queen so much that you neglected the puja and ArAdhanA of VinAyaka.

That is the real cause of your misery. There is still hope. You can his blessing by resuming the puja”

Then he related the story of the ancestors of Beema RAjan in great detail.

Vallava RAjan ruled over the city Palli in KarnAtaka. He was very happy until he got a son who was deaf, dumb and blind. He had bleeding wounds all over his body which could not be cured at all.

The queen Kamala also became disheartened by the futile attempts to cure the incurable diseases of the prince – whom they had named as Dakshan.

Twelve years rolled by and there was not any improvement in the condition of the prince Dakshan. King Vallava rajan lost his patience and ordered his queen to go to the forest with her incurable son.

The queen was in tears of helplessness. What would she do with a twelve year old boy who was thus handicapped in the wilderness? But the king turned a deaf ear to her.

So the queen left the city and went to the forest with her blind, deaf, dumb and bleeding son praying to god for help.