#15. பலி என்னும் மகன்

பிரணவ ஸ்வரூபனின் பக்தர் கிருச்சதமர்
பிரபஞ்சம் முழுவதும் பரவியது அவர் புகழ்;

பழித்து எள்ளி நகையாடிய முனிவர்கள்
பணிந்து, வணங்கிக் கௌரவித்தனர்.

சிறிது காலத்துக்குள்ளாகவே அவர் இன்றி
அரிது நிகழ்ச்சிகள் நடப்பது என்றானது.

தியானத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தார்
திறந்த கண்களில் இருந்து வீசியது யோகத்தீ .

பார்வை தீட்சண்யத்திலிருந்து பிறந்தான்
பார்த்தவர்கள் அஞ்சும் அரக்கன் ஒருவன்.

நடு நடுங்கினார் கிருச்சதமர் அச்சத்தால்
விடுத்தார் அச்சத்தை விநாயகனை எண்ணி!

“யார் நீ?” வினவினார் அசுரனிடம் அவர்.
“பார்வையில் தோன்றிய மைந்தன் பலி.

வெல்ல வேண்டும் மூவுலகங்களைப் போரில்.
சொல்லவேண்டும் நீர் அதற்கான உபயம்” என,

“வினாயக மந்திரத்தை உபதேசிக்கின்றேன்
விக்னங்களை அகற்றி வெற்றி அளிப்பான்.”

மந்திர உபதேசம் பெற்றான் பெற்றான் பலி
மனத்தினை அடக்கி மாதவம் செய்தான்.

தவத்தை மெச்சிக் காட்சி தந்தார் கணபதி.
தவத்தின் பயங்களாகப் பெற்றான் வரங்களை.

“மூவுலகங்களையுன் நான் வெல்ல வேண்டும்
ஏவல் செய்து தேவர்கள் பணிய வேண்டும்”

“மூவலகங்களையும் அடிமை கொள்வாய்
மூன்று உலோகக் கோட்டைகள் தந்தேன்

கரும்பொற் கோட்டை, வெண்பொற் கோட்டை
செம்பொற் கோட்டைகளைப் பெறுவாய் நீ!

அரிது அரிது இவற்றை வெற்றி கொள்வது
அரனார் சிவனாரைத் தவிர மற்றவர்களுக்கு”.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#15. Bali – the son of Kruchchadamar

kruchchadamar was a devotee of VinAyaka and his fame spread far and wide very soon. No auspicious event took place without involving him. The rushis who had ridiculed him came to him and honored him.

One day he sat in DhyAnam for a very long time. When he opened his eyes, yoga agni came out of his eyes. A terrifying asuran emerged from it. Kruchchadamar was startled to see him suddenly. He demanded to know who he was!

The asuran replied, “I am your son Bali, born out of the yoga sakthi emerging from your eyes. I want to conquer the three worlds. Please tell me how to go about it”

Kruchchadamar replied, “Son! I will teach you the VinAyaka mantram. He is the God of victory and you shall achieve your ambition. Bali learned the manta from his father. He did severe penance concentrating on VinAyaka.

Ganapathy was pleased with his penance and appeared before him. Bali asked for these boons from VinAyaka. “I must conquer all the three worlds. The DEvA must obey me and serve me well. ”

“You shall conquer the three worlds. I will give you three metal forts made of iron, silver and Gold. No one can overpower them except Lord Siva.”