#6b. சித்தியும், புத்தியும்

பன்னிரண்டு ஆண்டுகள் செய்தவத்தால்
கண்முன் கண்டான் கரிமுகக் கடவுளை.

“கர்வம் கொண்டு படைத்த காரணத்தால்
சர்வமும் சரிவர அமையவில்ல ஐயனே!

இட்ட பணியை நான் நன்கு புரிவதற்கு
கிட்டவேண்டும் தங்கள் அன்பும் ஆசியும்!”

கோரிய வரத்தை அளித்தார் விநாயகர்;
கூறினார் “என் இரு சக்திகளை வணங்கு!”

ஞானம், கிரியை என்ற அவர் இரு சக்திகள்
தானம் தந்தன சித்தியையும், புத்தியையும்.

சித்தி, புத்தியுடன் விநாயகரைத் தொழுது
சிருஷ்டியைத் துவங்கினான் பிரம தேவன்.

ஏழு மைந்தர்களைப் படைத்தான் முதலில்,
எழுவரும் தவம் செய்யச் சென்றுவிடவே;

எழுவரைப் படைத்தான் மீண்டும் பிரமன்,
எழுவரும் கானகம் நோக்கிச் செல்லவே;

சனகாதியர் நால்வரைப் படைத்தான்
ஞானவடிவான முனிகுமாரர் அவர்கள்.

நாரதரைத் தோற்றுவித்தான் பிரமன்
நாரணநாமமே ஆனது வாழ்வின் பயன்.

படைத்தார் பிறகு நான்கு வர்ணத்தாரை
பாதம், தொடை, புஜம், வாய் இவற்றால்.

சந்திரன் சிந்தையிலிருந்து தோன்ற;
இந்திரன் முகத்திலிருந்து தோன்ற;

கதிரவன் தோன்றியது கண்களிலிருந்து;
காற்றுத் தோன்றியது நாசிகளில் இருந்து;

விண்ணுலகு தோன்றியது திருமுடியில்;
மண்ணுலகு தோன்றியது திருவடியில்;

அத்தனை உலகங்களையும் உயிர்களையும்
நினைத்தபடி தோற்றுவித்தான் பிரமதேவன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#6b. Sidhdhi and Budhdhi

After twelve long years of penance, Brahma got the dharshan of VignEswar. “I got conceited as the creator and all my creations turned out to be defective. To perform my duty well please bless me with your grace!”

VignEswar blessed Brahma as desired by him. He said. “Pray to my JnAna shakti and KriyA shakti and seek their blessings also!”

JnAna shakti and KriyA shakthi blessed Brahma with Siddhi and Buddhi. Brahma prayed to VinAyaka along with Siddhi and Biddhi and started his srushti once again.

He created seven sons and all the seven promptly left to do penance. He created seven more sons who followed the path of their elder brothers.

Brahma now created Sanakan and his three brothers. They were Brahma gnaanis by birth. Narada was created next. He made Naaraayana namam his life’s sole purpose.

Brahma now created the four varnaas namely Brahmin, Kshatriya, Vaisya and Shudra from his mouth, shoulders, thighs and feet.

The moon was born out of his mind. The Sun was born out of his eyes. VAyu was born out of his nose and Indran out of his face.

Swarga appeared from his head and the earth from his feet. Al the worlds and the jivas were created out of Brahma’s own body as desired by him.