#13b. அகலிகை-2

விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கும்போதே
வடிவெடுத்துக் கொண்டான் இந்திரன் சேவலாக!

உரக்கக் கூவினான் ஆசிரமத்தின் அருகே நின்று;
உடனே புறப்பட்டார் கௌதம முனிவர் நதிக்கு.

முனிவர் அப்பால் சென்றதும் இந்திரன் – கௌதம
முனிவரின் வடிவெடுத்து நுழைந்தான் குடிலில்.

“அப்போது தான் வெளியே சென்ற தன் கணவர்
அதற்குள் திரும்பிவிட்டாரே!” வியந்தாள் அகலிகை

“கோழி கூவியதால் நீராடச் சென்றேன் விரைந்து.
வழியில் தெரிந்தது இன்னமும் விடியவில்லை என்று.

உறக்கம் கெட்டுவிட்டது இன்று !” என்று கூறி வந்து
கிறக்கத்துடன் அமர்ந்தான் இந்திரன் அகலிகை அருகே.

கணவன் என்று நம்பியதால் ஐயுறவில்லை அகலிகை.
கணவனின் அன்பில் திக்குமுக்காடினாள் அன்று.

உறக்கம் விடாத நிலையில் இருந்தன தென்பட்ட
உலகத்தின் உயிர்க் கூட்டங்கள் அனைத்துமே!

விண்மீன்களில் அமைப்பிலும் தெரிந்தது இன்னும்
விடிவதற்கு வெகுநேரம் உள்ளது என முனிவருக்கு.

மனம் கலங்கிக் குழம்பி ஏனோ சஞ்சலப் பட்டது!
மனம் இது போல இருந்தது இல்லையே தினமும்!

நித்யானுஷ்டானங்களை முடித்தார் விரைவாக.
வித்தியாசமான மனக்குழப்பத்துடன் திரும்ப;

அடைக்கப்பட்டு இருந்தன குடிலின் கதவுகள்
அழைத்தார் மனைவியைக் கதவைத் தட்டி !

கட்டிலில் தன்னுடன் இருந்தது கணவன் எனில்
எட்டியிருந்து அவர் குரல் ஒலிப்பது எப்படி?

கணநேரத்தில் புரிந்தது தான் மோசம் போனது!
கணவன் உருவில் இருந்தவன் கணவன் அல்ல!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#13 b. AhaylA DEvi – 2

Long before dawn, Indra assumed the form of a rooster. He crowed loudly in front of the ashram. Gouthama rushi thought it was time for the bath and daily prayers. He left for the river immediately.

The moment Rushi’s back was turned, Indra assumed the form of the rushi and entered the ashram. AhalyA was surprised to see him return so soon.

“It is not yet dawn. So I came back. My sleep had been disturbed unnecessarily.” Indra, in the guise of the sage, sat near AhaylA. She did not suspect any foul play and was happy with the love showered on her by the ‘sage’ on that day.

The rushi nGoutama on his way to the river, oticed that all the living creatures were in deep sleep. He looked up at the sky and found from the position of the stars that it was not yet time for dawn.

He hurriedly finished his daily prayer. His mind was deeply troubled for no known reason. Such a thing had never before happened. He hurried back to the ashram.

The doors were closed. So he knocked the door and called out his wife’s name. AhaylA was startled to hear her husband’s voice from outside the hut. ‘If her husband was outside the hut, then who was with her on the cot?’

She was shocked to realize that she had been deceived by a clever impersonator.