#16g. போர்

சண்டப் பிரசண்டர் வந்தனர் படையுடன்;
மூன்று மகன்கள் வந்தனர் தம் படையுடன்;

தேவர்கள் சேனையும் நின்றது தயாராக;
தேவர்கள் முழங்கினர் பெரும் சங்கநாதம்

பிரமன் செலுத்தினார் அற்புத ரதத்தினை!
பிரான் அமர்ந்தார் தேரின் ஆசனத்தில்.

பூதவெள்ளம் எழுபத்திஎண்ணாயிரம் கோடி;
தேவர்கள் சமூஹம் முப்பத்து முக்கோடி ;

முருகன் வந்தான் தன் தனிப்படையுடன்
அருகில் வீரபத்ரன் தன் தனிப்படையுடன்!

ஏழு கடல்களும் ஓரிடத்தில் கலந்தாற்போல
இரு படை சமுத்திரங்களும் கலந்தன அங்கே.

சுண்டிய விற்களின் நாணொலி பரந்து
அண்டம் எங்கும் சென்று எதிரொலித்தது.

திரிபுரன் பெற்றிருந்தான் அரிய வரங்கள்
திரிபுரங்களையும் இறக்கினான் போரில்.

பறந்து செல்லவும், இறங்க வல்லவும் ஆன
சிறந்த தேர்கள் போரில் ஆயுதங்கள் ஆயின!

சத்தம் இல்லாமல் புறங்களை இறக்கினான்;
மொத்தமாக தேவரை அழிக்க முயன்றான்.

மாயப் போரினைப் புரிந்தான் திரிபுரன்;
மாயையை மாற்றி அமைத்தார் அரன்;

வெற்றி தோல்வி இன்றிப் போர் நீண்டது!
வெல்வாரா பிரான் என்ற ஐயம் பிறந்தது!

அன்னையைத் துதித்தனர் அனைவரும் கூடி;
அன்னை ஐயனிடம் இவ்வையத்தைகே கூற

“திரிபுரனின் திறமையை வெளிப்படுத்தவே
அரிய போரை வேண்டுமென நீட்டுகின்றேன்

அழிவு காலம் மிகவும் நெருங்கி விட்டதால்
விழுந்து விடுவான் போரில் விரைவில் பலி!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#16g. The war

ChaNdan and PrachaNdan came with their armies. Bali’s three sons came with their armies. The DEvA got ready their army and blew their conchs such that the sound rocked all the three worlds.

Brahman held the reins of the wonderful chariot made by the DEvA. Siva sat on the seat in the chariot. The Bootha gaNam were 7.8 trillion in number; the DEvA were 330 million in number; Murugan came leading his own army; Veerabadran also joined along with his own army.

As if all the seven seas merged in a spot, the two oceans of warriors merged there. The twang of the bows reverberated through the Universe. The tripurams had magical powers. They could fly from anywhere and land anywhere. So these were used as the weapons in this war.

Tripuran made these chariots descend on the DEvA and killed them effortlessly. The aurAs were experts in MAyAjAl but Siva destroyed their power of MYyA. The war continued for a long time without victory or defeat for any of the two sides.

The DEvA got a doubt now whether Siva could really vanquish Tripuran. They asked their doubt to Uma Devi and she passed it on to Siva.

Siva replied, “I prolonged the war only to bring out the greatness of Tripuran. Now his end is nearing!”