#22g. பாலசந்திரர்

“அன்றே அளித்தேன் சாப விமோசனம்;
இன்று அளிப்பேன் இனியதொரு வரம்!

சங்கட சதுர்த்தியில் என்னைத் தொழுபவர்
சந்திர உதயத்தில் உன்னையும் தொழுவர்.

என்னை வாங்குபவர் உன்னையும் வணங்க
உன் ஒரு கலையை அணிவேன் முடியில்!”

சந்திரன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை;
சந்திரனின் ஒளி முன்னிலும் ஜொலித்தது!

ஆலயம் எடுத்தான் அன்புடன் அவன்
ஆனைமுக நாதனுக்கு அதே இடத்தில்.

பாலசந்திர விநாயகரை அமைத்துப்
பல சித்திகள் பெற்றான் ஆராதித்து.

சந்திரனைச் சூழ்ந்தன பல துன்பங்கள்!
சந்திரனின் துன்பங்கள் விலகின காண்!”

விவரங்களை எடுத்து உரைத்தான் பிரமன்.
விரும்பிக் கேட்ட மன்னனின் தந்தை

ஐயம் ஒன்றை எழுப்பினார் மீண்டும்,
“வையத்தில் புல்லுக்கு மகிமை ஏன்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#22G. BAlachandra VinAyakar

Lord GanEsha told the Moon,”I have given you sApa vimOchanam long back. Today I will give you more boons! Whoever worships me in the Sankata chathurti will worship you as you rise in the sky. To make sure that whoever worships me worship you also, I will wear your chandrakalai on my head henceforth”

The joy of Chandran knew no bounds. His brilliance was even more than what it was before. He built a temple for VinAyaka there. He established BAlachandra VinAyaka there. Moon did ArAdhanA and got many siddhis.

Moon was surrounded by problems and later they all vanished by the grace of lord GanEsha”

Brahma told this to the King’s father who asked one more doubt now, “Why is the Arugu grass considered so auspicious for GanEsha puja?”