#1b. காமந்தன்-2

காட்டில் கண்டான் அந்தணன் ஒருவனை!
கடிமணம் புரிந்திருந்த புது மணமகனை.

கிங்கரன் போல வழிமறித்தவனைக் கண்டு
சங்கடத்துடன் காலில் விழுந்து வணங்கி,

“அனைத்துப் பொருளையும் தருவேன் நான்
மனைவி காத்திருப்பாள் உயிர்பிச்சை தா!”

காமந்தன் காதில் விழவில்லை எதுவுமே!
கவர்ந்தான் பொருளை அவனைக் கொன்று.

பற்றியது அவனை பிரம்மஹத்தி உடனே!
பற்றின முற்றிய தீவினைப் பயன்களும்!

வியாதிகள் விளைந்தன, உதவுபவர் இல்லை;
விட்டு வந்த மனைவி வந்தாள் நினைவுக்கு!

தூது அனுப்பினான் தன் தோழன் ஒருவனை,
“எதாவது கூறி அவளை வரச் செய் என்னிடம்!”

“நாடு கடத்தப் பட்டவர்களுக்கு உதவுவது
கேடு விளைவிக்கும் அரசன் சினந்தால்!”

கணவன் தன்னைக் கை கழுவியது போல
கணவனைக் கை கழுவினாள் குடும்பினி.

மனைவியே வெறுத்து ஒதுக்கிய பிறகு
மதி தெளிந்தது கள்வன் காமந்தனுக்கு.

எண்ணி வருந்தினான் தன் பாவங்களை!
எண்ணி நாணினான் தன் செயல்களை!

முடிவு நெருங்குவதை உணர்ந்த அவன்
முற்றிலும் துறந்தான் தன் ஆசைகளை.

பரிஹாரம் செய்யவும் தயார் ஆனால்
பரிஹாரம் என்னவோ தெரியவில்லை.

நொந்த உள்ளத்துடன் வாடியவனிடம்
வந்து சேர்ந்தான் ஓர் ஏழை அந்தணன்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#1. b. KAmanthan – 2

One day KAmanthan saw a Brahmin pass by in the forest. He was newly married and was hurrying to get home to his young wife. He got scared when he was stopped by KAmanthan. He offered to give away all his belongings in return for sparing him alive.

But KAmanthan killed him mercilessly and took away all his belongings. The terrible Brahmahaththi dosham afflicted him immediately. The evil deeds done by him over the years bore fruits and afflicted him along with Brahmahaththi. He became a very sick man. There was no one to help him or take care of him.

He remembered his wife Kudumbini. He sent a messenger begging her to come and join with him. Kudumbini got scared since helping a banished person was considered as treason and was punishable by the king. She disowned him completely, just as he had done her years ago.

KAmanthan became wise after the events. He felt sorry for his heinous crimes. He felt ashamed for his wicked deeds. He gave up the desires for wealth and women.

He was a changed man now. He wanted to do parihAram for his sins, but no one wished to have anything to do with him. When he was feeling hopeless, a poor Brahmin came to him seeking help.