#27g. பிரமனின் யாகம்

பெருமானைக் குறித்துப் பொதிய மலையில்
பெரும் யாகம் ஒன்று செய்தார் பிரம்மதேவன்.

சாவித்திரி தேவியை விட்டுச் சென்றார்,
சரஸ்வதி தேவியுடன் யாகம் செய்வதற்கு.

கோபம் கொண்டாள் உதாசீனம் ஆனவள்.
சாபம் தந்தாள் யாகம் காண வந்தவருக்கு!

ஜலவுருவாகும்படி சபித்தாள் தேவர்களை.
ஜலவுருவாகி விட்டார்கள் வந்த தேவர்கள்!

அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்
ஜலவுருவடைந்த தேவரின் மனைவியர்.

செய்வது அறியாமல் திகைத்த பிரமன்
கைலாசபதியை தியானித்தார் மனத்தில்.

நந்தி வாகனம் மீது காட்சி தந்தார் சிவன்
“தந்தியைத் தொழுதிட மறந்து விட்டீர் நீர்!

இடையூறுக்கு ஆகும் அதுவே காரணம்.
தடைகள் நீங்கும் தொழுவீர் கணபதியை!

ஆதி காரணனை மறந்ததால் யாகம்
பாதியிலேயே நின்று விட்டது பாரும்!”

பெரிதும் வருந்தினர் தவற்றை யுணர்ந்து;
கரிமுக நாதனை பூஜித்தனர் தேவமாதர்!

மந்தார மரத்தடியில் செய்த பூஜையால்
எந்த விளைவுமே ஏற்படவில்லையே!

வன்னிப் பத்திரத்தால் அர்சிக்கும்படிச்
சொன்னது அசரீரி வாக்கு அப்போது .

வன்னிப் பத்திரத்தால் அர்ச்சித்த உடனே
எண்ணப் படிக் காட்சி அளித்தார் தந்தி.

ஏகம்ப கணபதியை நன்கு ஆராதித்து
தேவர்கள் பெற்றனர் தம் சுய உருவை.

பன்னிரண்டு ஆண்டுகள் பூஜித்த பிரமன்
தன்னிரண்டு மனைவியரோடு செய்தான்.

வேழமுகனின் அருளோடு செய்த யாகம்
தாழ்வின்றி நன்றாக நடந்து முடிந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#27g. Brahma’s yagna

Brahma wanted to perform a yagna in honor of lord Siva in the mountain POdigai. He left behind his wife SAvithri Devi and went to the Yagna sAla with his other wife Saraswathi Devi.

The neglected wife SAvithi Devi became wild with anger and cursed that all the DEvA who had come to witness the yagna be turned to water. All the Deva including VishNu and Indra became water.

The wives of the DEvA came running and crying. Brahma was shocked beyond words. He contemplated on Lord Siva who appeared on his Nandi vAhanam.

Siva told Brahma, “You forgot to invoke the blessings of VinAyaka before you started the yagna. That is the cause of all these troubles. Worship VinAyaka and start the yagna once again with his blessings and it will be completed successfully.”

Brahma and all the wives of the DEvA worshiped Vinayaka under the MandAra tree – but nothing happened.

Then they heard an AkAshvANi telling them to do the archanani with the vanni patrams. When the vanni patra archani was done, VinAyaka appeared before them. They worshiped the Ekamba VinAyaka and got back their original forms.