#19c. பிரத்யும்னன்

ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் ஐயன்
ஆயிரம் ஆதவர்கள் போலத் தோன்றினார்.

“என்ன விரும்புகிறாய் மன்மதா நீ கூறு!
என்னை தியானித்த காரணத்தைக் கூறு!”

“தாருகனை அழிக்கத் தோன்றவேண்டும்
ஏறுமயில் வாஹனன் நம் ஈசனிடமிருந்து!

யோகத்தில் அமர்ந்துவிட்ட ஈசனை நான்
போகத்தில் செலுத்துவது எளிதானதா?

பஞ்ச பாணங்களை எய்தேன் ஈசன் மீது!
பஞ்சாக எரிந்தேன் பார்வை பட்டபோது!

உயிர்ப்பிச்சை தந்துவிட்டார் உடனேயே
உருவத்தை இன்னும் பெறவில்லை நான்!

இழந்த சக்திகளை மீண்டும் தரவேண்டும்
இழந்த உருவை மீண்டும் பெறவேண்டும்”

“நிறைவேறும் உன் கோரிக்கை விரைவில்;
நிறைவெய்துவாய் முன்போலத் திறனில்.

கண்ணன் ஆவான் மண்ணில் நாரணன்.
கண்ணன் மகன் ஆவாய் நீயும் மன்மதா!

முன் போலவே அடைவாய் இழந்துவிட்ட
உன் சக்தியையும், அழகிய உருவையும்!”

மன்மதன் எடுத்தான் ஆலயம் அங்கே;
மகோற்கட வினாயகரை அமைத்தான்;

கண்ணன் ஆனான் மண்ணில் நாரணன்.
காலம் கனிந்தது குறைகள் நிறைவெய்த!

பிரிய ருக்மிணியிடம் தோன்றினான் மகன்
பிரத்யும்னன் என்கின்ற அழகிய மன்மதன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#19c. Pradyumnan

Manmathan meditated on VinAyaka for one thousand years. VinAyaka appeared as one thousand suns shining together. He blessed Manmathan and asked him, “What do you wish for? Please tell me!”

“TArukan has to be destroyed. Only Siva’s son can do it. Siva is in Yoga. I was ordered to change his interest from Yoga to Bhoga. I aimed my flower arrows at him. But his fiery glance burned me down. I was resurrected immediately but I am yet to regain my original form and my powers.”

“You will regain your powers and your original form very soon. Vishnu will take avatar as Krishna very soon. You will be born as his son Pradyumnan. Then you will regain your form and all your powers as before.”

Manmathan became happy with this boon. He built a temple there for VinAyaka. He established a VinAyaka there and did ArAdhana.

When VishNu appeared as Krishna on earth, Manmathan was born as his son Pradyumnan to Rukmini Devi.