#12c. ருக்மாங்கதன்-3

“உங்கள் நடத்தை வெகு விசித்திரம் தாயே!
உங்களுக்குத் தெரியாத சாஸ்திரங்களா?”

“பிற பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதே!
பிற பெண்களிடம் இச்சை கொள்ளாதே!

சாஸ்திரம் கூறுவது இவையே மன்னா!
சாஸ்திரம் பொருந்தாது நம் விஷயத்தில்.

இச்சை கொண்டது நான்! நீயல்லவே!
இன்பத்தை விழைவது நான்! நீயல்லவே!”

அருகில் நெருங்கினாள் அவள் அவனிடம்.
நெருப்புப் பட்டது போல விலகினான் அவன்.

“நான் மக்களுக்கு வழி காட்டும் அரசன்!
நான் கற்புகரசி ஒருத்தியின் கணவன்!”

“சயனவேளையில் சாஸ்திரம் பேசுவதா?
பயனற்ற வார்த்தைகள் எதற்கு மன்னா!”

அரசனை வலிந்து தழுவினாள் அவள்.
அரசன் அவளைப் பிடித்து உந்தினான்.

“மோகத்தால் அறிவிழந்து விட்டாய் நீ!
காமத்தால் கண் இழந்து விட்டாய் நீ!

முனி பத்தினி என்பதால் உயிர் தப்பினாய்
இனியும் செய்யதே இதுபோல் எவரிடமும்”

வேகமாக வெளியேறினான் ருக்மாங்கதன்.
கோபமாகச் சபித்தாள் அரசனை முகுந்தை,

“பெண்ணே விரும்பி அழைத்தும் கூடக்
கண் மூடிச் செல்லும் நீயும் ஓர் ஆடவனா?

கெடுத்தாய் கற்பை, என் ஆவலைத் தூண்டி!
கெடட்டும் உன் வடிவம் வெண்குஷ்டத்தால்!

பெண்களை மயக்கிடும் உன் சுந்தர ரூபம்
பெண்கள் வெறுக்கும்படி மாறி விடட்டும்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#12c. RukmAngathan – 3

“Your behavior is very strange oh lady! Surely you know the saasthraas!” the king RukmAngathan told the rushi patni Mukundai.

“Do not desire women other than your wife. Do not look at the women other than your wife! This is what sAsthram tells us. But in our case sAsthram does not hold good. It is I who has the desire, not you! It is I who seeks pleasure not you!

Mukundi came closer to the king. He jumped back as if he had touched a live coal.

“I am the king of a country. I should be a living example to my citizens. I am married to a virtuous woman already.”

“Who wants to listen to these lectures instead of pure enjoyment? Stop talking about useless things!” Mukundai embraced him forcefully.

The king pushed her away and spoke in anger,” you have lost your sense due to desire. You are blinded by your passion. You are still alive since you are a rushi patni. Never behave in this manner with anyone else in the future” The king left the place angrily.

Mukundai cursed him thus,” Even when a beautiful woman begs you to take her, you leave the place closing your eyes. Are you a real man?

You have disturbed my peace of mind and made me lose my virtue. May your beautiful form be ruined by leucoderma. May your figure which disturbs the minds of women become hideous and unsightly!”