#16b. திரிபுரன்-2

பலி உற்சாகப்படுத்தினான் படை வீரரை!
வலிமை பெற்றதோ விநாயகர் அருளால்!

இந்திரன் உடைத்தான் குதிரையின் கால்களை!
இந்திரன் மயங்கும்படி ஓங்கி அடித்தான் பலி.

மூவுலகையும் வெல்லும் வரம் படைத்தவன்
முன் நிற்க இயலாது மறைந்தான் இந்திரன்.

ஐராவதத்தில் அமர்ந்து வென்றான் பலி,
பிரமலோகம், வைகுண்டம், சுவர்க்கம்!

திக்விஜ்யம் முடித்துத் திரும்பினான் பலி;
திரிபுரத்தை அருளவேண்டினான் ஐயனை.

நூறு யோசனை அகலமும், உயரமும் கொண்ட
மூன்று கோட்டைகள் வந்தன வானிலிருந்து.

மகன்கள் மூவரைத் தோற்றுவித்தான் பலி
மனத்திலிருந்து, தன் மனம் விரும்பியபடி.

வஜ்ஜிர தம்ஷ்டிரன், வீமகாயன், காலகூடன்
விரும்பித் தோற்றுவித்த மகன்கள் மூவர்.

சுக்கிலம் ஆனது அந்த இரும்புக் கோட்டை.
சுபிலம் ஆனது அந்த வெள்ளிக் கோட்டை.

சுவர்த்தி ஆனது அந்தத் தங்கக் கோட்டை;
சுரக்ஷணை கூடியது இந்தத் திரிபுரங்களால்!

சண்டன் ஆண்டான் சத்திய லோகத்தை – பிர
சண்டன் ஆண்டான் வைகுண்ட லோகத்தை.

மகிஷி ஈன்றாள் பலியின் மகன் மதனை.
ஏகி ஒளிந்தனர் தேவர்கள் கயிலையில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#16b. Thripuran – 2

Bali encouraged his soldiers to fight better. They were also stronger due to the blessings of VinAyaka. Indra broke the front legs of the horse on which Bali was riding. Bali jumped down and hit Indra hard so as to make him swoon.

A terrible one to one war followed between Indra and Bali. Indra was no match to Bali and he quietly disappeared from the battle field and escaped to KailAsh.

Bali entered the heaven seated on Indra’s four tusked white elephant AirAvat. There absolutely no resistance in swargga. Then he went to SatyalOkam and Vaikuntam. They too fell without any resistance. All the DEvA had taken refuge in KailAsh, since lord Siva was the only person who could win over Bali.

After the completion of the digvijayam, Bali returned to the earth. He requested VinAyaka to grant him the the three metal forts promised earlier. Bali created three sons out of his mind with sankalpam. Vajradamshtran, BeemakAyan and KAlakootan were the three sons.

The three metals forts flew down from the sky. The iron fort was named as Sukla, the silver fort as Subila and the gold fort as Suwarthi. ChaNdan ruled over SatyalOkam and PrachaNdan ruled over Vaikuntam as Bali’s representatives.

Bali’s wife gave birth to a son named Madhan. All the DEvA had taken refuge in KailAsh by then.