#23e. அனலாசுரன்-2

இந்திரனை நாடி ஓடினர் தேவர்கள்;
இந்திரன் நாடினான் பிரமதேவனை;

நாரணனை நாடினார் பிரம தேவர்
நாரணன் கூறினார் தேவர்களிடம்,

“அனலாசுரனை அழிக்க வல்லவர்
ஆனைமுகன் ஒருவனே என்றறிவீர்.

ஐங்கரனை பணிந்தால் அவன் உமது
சங்கடங்களைத் தீர்ப்பான் விரைந்து!”

நாரணன் கூறியபடியே தேவர் குழாம்
நாடிச் சென்றது வேழமுக வேந்தனை.

கருத்தினை அறிந்து கொண்டார் அவர்.
உருவெடுத்தார் ஒரு பிரம்மச்சாரியாக.

ஆதிப் பரம்பொருளே அந்த பிரம்மச்சாரி
அறிந்து கொண்டு வணங்கினர் தேவர்கள்.

சங்கடங்களைக் கூறினர் விநாயகரிடம்.
ஐங்கரன் அளித்தான் உடனே அபயம்.

தேவர்களைத் தேடிவந்த அனலாசுரன்
தேவர்குழுவைக் கண்டு கொக்கரித்தான்.

“சிரமம் இல்லது செய்துவிட்டீர் நீவீர்
ஒரே இடத்தில் குழுமியதன் மூலம்!”

அஞ்சிய தேவர்கள் தஞ்சம் புகுந்தனர்
மிஞ்சிய தெய்வம் இல்லாத விநாயகரை!

நெருங்கிய அசுரனை வாரி வளைத்தார்,
நொடியில் அனலனை விழுங்கி விட்டார்.

“நீ காணவேண்டிய உலகங்கள் இன்னும்
நிறைய உள்ளன என் வயிற்றுக்குள்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#23e. AnalAsuran

Whenever in trouble, the Deva seek Indra’s help; Indra seeks Brahma’s help and Brahma seeks VishNu’s help.

VishNu told the gathering, “Only VinAyaka can put an end to Analasuran. Go and pray for his grace!”

The Deva went to Ganapathy who knew their innermost thoughts and transformed himself to a young attractive brahmachari.

The Deva knew that it was none other than Lord GanEsa. They told him of their suffering and sought his help in putting and end to AnalAsuran.

GanEsa gave them abhayam immediately. Meanwhile AnalAsuran went in search of the missing DEvA. He was happy to find them all with the young brahmachari.

He chuckled to himself and said, “You have made my job much easier by assembling in one place”. He approached them menacingly. The Deva hid behind GanEsha. As AnalAsuran came nearer GanEsha grabbed him and swallowed him whole.

He told the ausran “There are many worlds in my stomach which you have not seen yet. Have a glimpse of them now!”