#18b. நளன்

நளராஜன் என்னும் நிடத மன்னனும்
நலம் பெற்றான் சதுர்த்தி விரதத்தால்.

நிடத நாட்டை ஆண்டு வந்தான்
ஈடு இணையற்ற மன்னன் நளன்.

அழகன் நளராஜனின் மனைவி
அழகி, குணவதி ஆகிய தமயந்தி.

கௌதமர் வந்தார் நளனைக் காண;
கௌரவித்த நளன் அவரைக் கேட்டான்,

“பேரின்பப் பேற்றினை அடைவதற்குச்
சீரிய விரதங்கள் செப்புங்கள் ஐயா !” என

“சென்ற பிறவியில் நீ கௌட தேச மன்னன்;
சென்றாய் பகைவரை வென்று வாகை சூட.

சதுர்த்தி விரதம் செய்தாய் பக்தியுடன்.
அது தந்தது விநாயகரின் பூர்ண அருள்.

வென்றாய் பகைவரைப் போரில் எளிதல்;
இன்றும் மன்னனாக வாழ்ந்து வருகின்றாய்.

இப்பிறவியிலும் செய்வாய் சதுர்த்தி விரதம்
எப்பிறவியிலும் எய்துவாய் நற்பயன்கள்!”

நளராஜன் செய்தான் சதுர்த்தி விரதம்;
நளன் அடைந்தான் இகபர போகங்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#18b. NaLan

NaLa RAjan ruled over NishAda Kingdom. His beautiful wife was Damayanti. NaLan performed Chathurti vratham and obtained happiness in this world as well as in the next.

Rushi Gouthama came to visit NaLan once. The king asked the sage, “Sire! please tell me the vrathams I should observe in order to break away from the samsAra and obtain eternal bliss”

Sage Gouthama replied to the king,”You were the king of Gowda dEsam in your previous birth. You went to the battlefield to vanquish your enemies. You performed the Chathurti vratham with sradhdha and bhakti. It earned you the grace of Lord VinAyaka.

You won the battle with ease. You lived a good life. You are again born as a king . If you observe the chathurti vratham now, it will shower on you the grace of VinAyaka and make your life good. ”

The king performed the Chathurti vratham and obtained happiness in this world as well in the next.