#23d. அனலாசுரன்-1

தாபரம் நகரின் தென்பக்கத் தோப்பில்
தவமுனிவர் கௌண்டின்யர் வசித்தார்.

ஆசிரியை முனிபுங்கவரின் மனைவி.
பூசிப்பர் ஐங்கரனை நேசத்துடன் இவர்.

அனுதினம் அறுகம் புற்கள் கொணர்ந்து
அர்ச்சிப்பர் பதினாயிரம் அறுகுகளால்!

“மலர்கள் வித விதமாகக் கிடைக்கையில்
மணமில்லாத புற்களால் பூசிப்பது ஏன் ?”

ஆசிரியை கேட்டார் ஐயத்தை அவரிடம்;
நேசிக்கும் மனைவிக்கு கூறினார் முனிவர்.

“தேன் பருகும் வண்டாகச் சுவைத்தான்
தேவமாதரின் நடனத்தை யமன் அன்று.

நழுவியது திலோத்தமையின் மேலாடை.
நகர்ந்து சென்றுவிட்டாள் நாணத்துடன்.

விழுந்த மேலாடை தூண்டியது விரகத்தை
எழுந்து விரைந்தான் அந்தப் புரத்துக்கு.

அதிக விரகத்தால் வெளிப்பட்டது தேஜஸ்
அதனின்றும் தோன்றினான் அனலாசுரன்.

நடுங்கினர் தேவர்கள் அசுரனைக் கண்டு
நான்கு புறங்களிலும் ஓடி ஒளிந்தனர்.

அரக்கனைக் காண விரும்பாத யமன்
அடைக்கலம் புகுந்தான் அந்தப்புரத்தில்!

அனலாசுரன் அடைந்தான் மிகச் செருக்கு.
அடித்துத் துன்புறுத்தினான் தேவர்களை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#23d. AnalAsuran

KouNdinya and his wife Aasiriyai lived in a palm grove in the southern side of the TAparam city. They both were devotees of VinAyaka. They would gather fresh green Arugu grass and select ten thousand tiny branches for the daily archanai of VinAyaka.

Aasiriyai wondered why the green Arugu grass which had no fragrance was preferred over the colorful and fragrant flowers. Koundinya told her this incident to explain the greatness of the green Arugu grass over the fragrant flowers.

Yamadharman was watching the divine dance by the celestial nymphs. During the dance, the upper garment of Thilothama came off loose. She felt shy and left the place quickly.

But Yama was badly aroused by the sight of her beauty. He too got up and rushed to his anthappuram. But before he could reach it, his tejas had emerged. From it emerged a son named AnalAsuran.

He was terrifying to look at and ferocious in his behavior. All the DEvA ran away at his sight and hid themselves. Yama himself did not want to set his eyes up on his son. He locked himself up in his anthappuram.

This made AnalAsuran more haughty and arrogant. He started harassing and troubling the DEvA in various ways.