#19f. பாணாசுரன்

மகனைக் காணாது பிரத்யும்னன் தேட,
மகன் இருக்கும் இடம் தெரியவில்லை!

களவுத் திருமணம் வெளியாகி விட்டது;
உளவுத் தொழில் எவரும் புரியும் முன்பே!

இன்பத்தின் விளைவு பெரும் துன்பமானது;
கன்னி கருவுற்றது அதிர்ச்சியை அளித்தது!

அந்தப்புரத்தில் ஆடவன் ஒளிந்திருந்தது
தந்தை பாணனுக்குச் சினத்தை அளித்தது!

கன்னியைக் கருவுறச் செய்தவன் போனான்
கண்ணிமைக்கும் நேரத்தில் சிறைச்சாலை!

தன் மகனைத் தேடி வருந்தி இளைக்கும்
தன் மகனிடம் கூறினாள் ருக்மிணிதேவி

சதுர்த்தி விரதத்தின் மகிமையைகளை!
அது புரியும் வியத்தகு விளைவுகளை!

சதுர்த்தி விரதம் செய்தான் பிரத்யும்னன்
அது வரவழைத்தது ஸ்ரீ நாரத முனிவரை!

பாணன் அநிருத்தனைச் சிறை செய்ததை
காணாது மகனைத் தேடுபவனுக்குக் கூற;

அளவற்ற சினத்துடன் போரிட்ட கண்ணன்,
களவுமணத் தம்பதியரை மீட்டு வந்தான்!

பிரிந்தவர் சேர்ந்ததும் பெருகியது இன்பம்,
விரத மகிமையினை உணர்ந்தது உலகம்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#19f. BANAsuran

Pradyumnan searched for his missing son Aniruddhan everywhere but could not trace him. The secret wedding came to broad daylight when Usha became pregnant. The happiness of secret love was followed by the public shame of the pregnancy of an unwed girl.

When BANAsuran knew that the man responsible for this was hiding in his palace, he became very angry and put Aniruddhan in prison. Rukmini Devi told her son Prathyumnan who was madly searching for his missing son Aniruddhan the greatness of the Chathurthi vratham.

Pradyumnan performed Chathurti vratham. NArada appeared there and told them that BANAsuran was holding Anirudhdhan as a prisoner. Krishna waged a war with BANAsuran and freed Aniruddhan from the prison.

Usha and Aniruddhan were brought home by Krishna. There was joy everywhere now that the family members got united after a long separation. Once again the greatness of the Chathuti Vratham was proved to the world.