#5a. விஸ்வரூபம்

பிரளயத்தின் போது பன்னிரு ஆதித்யர்கள்
பிரபஞ்சத்தைத் தகித்தனர் உஷ்ணத்தால்!

மழையின்றி வரண்டது உலகு அனைத்தும்;
பிழைப்பது அரிதாகியது உயிரினங்களுக்கு.

அதீத உஷ்ணம் தாக்கவே ஆதிசேஷன் தன்
ஆயிரம் வாய்களால் கக்கினான் விஷாக்னி.

பன்னிரு ஆதித்யர்களும் பஸ்பமாயினர்!
அண்ட சராசரங்களும் அழிந்து ஒழிந்தன!

மேகத் திரளை உண்டாக்கியது அவ்வெப்பம்.
மேகத் திரள் வர்ஷித்தது கன மழையினை.

பொழிந்தது கன மழை நூறு ஆண்டுகள்.
பெருகிய வெள்ளத்தில் முழுகியது உலகம்!

மும்மூர்த்திகள் ஒன்றாக ஐக்கியமாகிவிட
மூவுலகங்களிலும் நிலவியது சூன்யம்!

பரம்பொருளாகத் தோன்றினார் விநாயகர்;
படைத்தார் மும்மூர்த்திகளை விநாயகர்.

தங்களைப் படைத்த பரம்பொருளை அறிய
தம்மால் இயன்றவரை தேடினர் மூவரும்.

அரும் தவம் செய்தனர் ஓராயிரம் ஆண்டுகள்;
அரியகாட்சி அளித்தார் விநாயகர் பெருமான்.

கோடி சூரியரின் பிரகாசம் ஒளிர்ந்திட
முடியில் நவரத்ன கிரீடம் ஒளிர்ந்திட

நெற்றியில் திலகம்; காதில் குண்டலம்;
பற்றிய ஆயுதங்கள்; வளைந்த துதிக்கை;

கொன்றை மாலை; பொன்னணிகள் மின்ன;
அண்ணல் தோன்றினார் அவர்கள் முன்பு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#5a. Vigneswara’s Viswaroopam.

During the praLaya (Dissolution), the twelve Athithyas burned down the whole world. Rains failed and the heat became too intense to be borne. AdisEshan could not bear the heat and spat out poisonous fumes through all his one thousand mouths.

The heat and the poisonous fumes destroyed the whole world and the twelve Sooryas turned to ash. The intense heat produced dense rain clouds.

These clouds rained down heavily for one hundred years. The world was flooded. The trimoorthis merged into one. There was nothing to be seen anywhere in all the three worlds.

VignEswara appeared as the parabrahman. He created the trimoorthis. They wished to know their creator and did penance for one thousand years. Pleased with their penance VignEswar appeared in front of them.

He had the brilliance on a ten million Suns shining together. He wore a crown studded with the nava ratnas.

His forehead was adorned by a thilakam and his ears with kundalam. He held his weapons in his hands and his trunk appeared bent. Flower garlands and gold ornaments shone on his chest.