#9c. பிணி நீங்கியது-3

கானகத்தில் வந்து சூழ்ந்தனர் கள்வர்;
ஆனால் கொல்லவில்லை இருவரையும்.

எட்டியே சென்றுவிட்டது அரச வாழ்வு!
கட்டிய துணியுடன் திரிந்தனர் காட்டில்.

உடல் மெலிந்தனர் உண்ண உணவின்றி;
அடைந்தனர் பின் குண்டினபுர நகரத்தை.

ஊருக்கு வெளிய உள்ள கோவிலில் தன்
ஊமை மகனை விட்டுச் செல்வாள் கமலை.

பிச்சை எடுத்துக் கிடைத்த உணவை உண்டு
அச்சிறுவனுடன் உயிர் வாழ்ந்தாள் கமலை.

முத்கல முனிவர் அருகே வசித்து வந்தார்.
வித்தக விநாயகனின் அருளைப் பெற்றவர்.

தக்கனும் கமலையும் தெருவில் சென்றிட
முத்கல முனிவர் எதிர்ப்பட்டார் ஒருநாள்.

முனிவரைத் தொட்ட காற்று வீசியது;
கனிவுடன் பட்டது தக்கன் உடல் மேல்!

வியத்தகு மாற்றங்கள் விளைந்தன அங்கே
வியனுலகு எங்குமே கண்டிராத வண்ணம்!

பார்வை கிடைத்துவிட, தக்கன் பார்த்தான்;
செவிப்புலன் கிடைக்க, அவன் கேட்டான்

பேசும் திறன் வரவே, அவன் பேசினான்.
வீசியது மேனி எழில்; ரணம் மறைந்தது!

மன்மதனைப் பழிக்கும் அழகன் ஆனான்!
அன்னையின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

“குணப்படுத்துவதற்கென்றே எம் இறைவா!
பிணங்கச் செய்தாயா எம்மிடம் அரசனை?”

வாரி அணைத்து உச்சி முகர்ந்து தக்கனை
வாயார “அம்மா!” என்றழைக்கச் சொன்னாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#9c. The miraculous cure – 3

A group of thieves surrounded them in the jungle but they took pity and did not kill the blind boy and his mother. Kamala could not console herself to her present situation. She was living in a palace as the queen and now she is roaming the forest with not even a change of dress.

They became lean due to lack of good food. They reached a city called KuNdinapuram. There was a temple in the outskirts of the city. Kamala would leave the blind boy in the temple and go and beg for food. They shared the food and kept their body and soul together.

Mudgala rushi was living nearby. He had the pari poorNa krupa katAksham of VignEswar. One day Kamala took her son also along with her. Mudgala rushi was walking down the street. When they crossed on the road a miracle happened. The breeze which touched the sage touched Dakshan and the events that followed can only be imagined by us.

The blind boy got his vision. He could see very well now. He got his power of speech and he could speak very well now. He got the power of hearing and he could hear very well. All his bleeding wounds disappeared and he became as god looking as Manmathan himself.

Kamala could not contain her happiness. She cried,”Oh God! did you make us come here to get cured? Did you make the king order us out of the palace only to see this happy day?”

She told her son to call her as mother several times which sent her into raptures.